Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சர்வதேச வர்த்தகக் சந்தை ஐந்தாவது தடவையாகவும் நாளை யாழில் ஆரம்பம்

JITF-2014-jaffna newsயாழ்ப்பாணத்தில் ஐந்தாவது முறைாகவும் சர்வதேச சந்தை (Jaffna International Trade Fair—2014) நாளை ஆரம்பமாகவுள்ளது. இக்கண்காட்சி 17 (வெள்ளிக் கிழமை), 18 சனிக்கிழமை, 19 ஞாயிற்றுக் கிழமை) ஆகிய மூன்று நாட்களில் துரையப்பா விளையாட்டரங்கில் காலை 10.00 தொடக்கம் இரவு 8.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், கைத்தொழில் மற்றும் வரத்தகத் துறை அமைச்சு, யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றம், யாழிலுள்ள இந்தியத் துணைத்தூதரகம், யாழ். மாநகர சபை இலங்கை கண்காட்சிப் பணியகம் ஆகிய தரப்பினர்களின் ஆதரவுடன் இடம்பெறுகின்றது.

இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பல கலந்துகொள்ளவுள்ளதுடன் விவசாயம், கைத்தொழில் – கட்டுமானம், உணவு மற்றும் மென்பானம், பொதியிடல், ஆடை கைத்தொழில், வாகனங்கள், தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம், பராமரிப்பு, போக்குவரத்து – சுற்றுலா, நிதியியல் சேவைகள் மற்றும் இதர நுகர்வு பொருட்களுக்கான பல புதிய தொழில் நுட்ப அறிமுகங்களுடன் கூடிய புதிய உள்ளூர், வெளியூர் உற்பத்திகள் என 250 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இந்த வர்த்தகச் சந்தையில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இக்கண்காட்சி நடைபெறும் ஒவ்வாரு தினங்களும் துரையப்பா விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

– Nirujan Selvanayagam

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com