Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள், விஸ்ணு ஆலயங்கள் » கோலாகலமாக தேர்வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்(படங்கள் இணைப்பு)

யாழ். வடமராட்சியிலுள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கையின் வடபால் யாழ். வடமராட்சியில் அமைந்துள்ளது சரித்திரப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமான ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் புராதன சிறப்புடன் விளங்கும் மாயவனின் வலக் கரத்திலுள்ள சக்கரத்தை மூலஸ்தானத்தில் வைத்து வழிபடும் வழிபாட்டு முறை காணப்படுகிறது.

வைணவ மதச் சின்னமான திருநாமம் என்று அழைக்கப்படும் திருமண் இலங்கையில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கிடைக்கப் பெறுகின்றது. இதுவும் ஒரு சிறப்பம்சமாகும்.

வைணவ வழிபாட்டு முறைகளில் விநாயகருக்கு வழிபாடு நடத்தப்படுவதில்லை. ஆனால் இங்கு அனைத்துச் சமய வழிபாடுகள் கிரியைகள் யாவற்றின்போதும் விநாயகப் பெருமானுக்குப் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டே ஏனைய பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

மூன்று வீதிகளுடன் பெரிய திருக்கோயிலாக விளங்கும் இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயம் 1948ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1977ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாக சபையினரின் பராமரிப்பரிப்பில் ஆலயம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

71 அடி உயரமான இராஜ கோபுரத்துடன் வடமராட்சிப் பதியிலே வல்லிபுர ஆழ்வார் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.



Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com