Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது(படங்கள்)

Faculty of Engineering-Jaffna universityகிளிநொச்சியின் அறிவியல் நகரில் நேற்று யாழ் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக விவசாய பீடம் கிளிநொச்சியில் இயங்கிவந்த போதிலும் கடந்தகால போரினால் முற்றாக சேதமடைந்ததை தொடர்ந்து யாழ் மாவட்ட பிரதேசத்தில் இயங்கி வந்தது. தற்போது புதிய கட்டிடத் தொகுதியில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு மிகவும் நீண்ட காலமாக கிளிநொச்சியில் காணி ஒதுக்கப்பட்ட நிலையிலும் தற்போதுதான் நிர்மாணிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திசநாயக்கா, அமைச்சர் டகளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்தினம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அனைத்துப் பீடங்களையும் கற்கைநெறிகளையும் கொண்டதாக இலங்கையின் இரண்டாவது உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விளங்குகின்றது. அனைத்துப் பீடங்களையும்கொண்ட ஒரேயொரு பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகமே இதுவரை காலமும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புபட்ட செய்தி

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com