Subscribe:Posts Comments

You Are Here: Home » கல்வி, யாழ்.செய்திகள் » தேசிய ரீதியில் முதல் 10 இடங்களில் 3 வடக்கு மாகாண மாணவர்களுக்கு

புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாண மாணவர்கள் தேசியரீதியில் முதல் 10 இடங்களில் 3 இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இது வட மாகாணத்தின் கல்வித்துறை வளர்ச்சிப் போக்கைக் காட்டுவதுடன் மீண்டும் வடமாகாணம் தேசிய ரீதியில் முன்னிலை பெறுவதற்கான சான்றாகவும் அமைந்துள்ளது.இவ்வாறு வடக்கு மாகாணக் கல்விப் பணிப் பாளர் பி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர்இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரி சில் பரீட்சையில் தேசிய ரீதியிலும், மாகாண ரீதியிலும் சாதனை படைத்த எமது பிள்ளை களை வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் மனதாரப் பாராட்டுகின்றேன்.செல்வன் பரமேஸ்வரன் சேதுராகவன் 194 புள்ளிகளைப் பெற்றுத் தேசிய ரீதியில் 2 ஆம் இடத்தையும், தமிழ்மொழி மூல மாணவர்களில் 2 ஆம் இடத்தையும், வடமாகாணத்தில் 1 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். யுத்த அனர்த்தங்களில் சிக் கிய இம்மாணவன் இவ்வாறு ஒரு சாதனை படைத்துள்ளமை அவருடைய பெற்றோர் களினதும் பிள்ளையினதும் மனவலிமை யையும் விடாமுயற்சியையும் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. அவர் எமது மாகாணத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவரை நாம் அனைவரும் மனதாரப் பாராட்டுகின்றோம். அவருக்கு வழிகாட்டிய முல்லைத்தீவு வலய நெத்தலியாறு தமிழ் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் ஆகி யோரும் பாராட்டப்படவேண்டியவர்கள். இனிவருங்காலங்களிலும் பல்வேறு சாதனை களைப் படைக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
அடுத்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி செல்வி சர்வானந்தன் சர்மிகா 193 புள்ளி களைப் பெற்றுத் தேசியரீதியில் 4 ஆம் இடத்தைப் பெற்றதோடு தமிழ்மொழி மூல மாணவர்களில் 4 ஆம் இடத்தையும், எமது மாகாணத்தில் 2 ஆம் இடத்தையும் வவு னியா மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார். அவருடைய பெற்றோர்களையும் அவரை வழி நடத்திய பாடசாலை அதிபர் ஆசிரியர் களையும் மனதாரப் பாராட்டுகின்றேன்.யாழ்.புனித பொஸ்கோ வித்தியாலய மாணவி செல்வி இரமேஸ் நிதூசிகா 192 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் 10 ஆம் இடத்தையும், மாகாணத்தில் 3 ஆம் இடத்தையும், யாழ். மாவட்டத்தில் 1 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இவரையும் மனதாரப் பாராட்டுகின்றேன். அவருடைய பெற்றோர்களையும் அவரை வழிநடத்திய பாட சாலை அதிபர், ஆசிரியர்களையும் மனதாரப் பாராட்டுகின்றேன்.

இதுபோல இன்னும் பல மாணவர்கள் இம்முறை மாவட்ட ரீதியில் சிறப்பாகச் சித்தியடைந்துள்ளனர். அவர் களைப் பற்றிய பூரண தகவல்கள் எமக்கு வந்து சேராத போதும் அவர்களையும் அவர்களை வழிநடத்திய பாடசாலைகளையும் பாராட்டுகின்றேன்.இவற்றுக்கு அடித்தளமிட்ட மாகாணக் கல்வித் திணைக்கள ஆரம்பக்கல்வி உத விக் கல்விப்பணிப்பாளர், அவருடன் இணைந்து செயற்பட்ட வலயங்களைச் சேர்ந்த ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆரம் பக் கல்விச் சேவைக் கால ஆசிரிய ஆலோசகர்கள், அவர்களை வழிநடத்திய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் சார்பில் பாராட்டுகின்றேன்என்றுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com