Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » தென்மராட்சியில் ஒரு குரங்கு பிடித்தால் ஆயிரம்ரூபா

monkey3தென்மராட்சியில் அதிகரித்துவரும் குரங்குத் தொல்லையை கட்டுப்படுத்த வனவிலங்கு அதிகாரசபை ஒருகுரங்கை பிடித்து கொடுத்தால் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தென்மராட்சியில் குரங்கு தொல்லை அதிகரித்து செல்வதால் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். மாங்காய், முருங்கைக்காய், தென்னங்குரும்பை, காய்கறிகளை குரங்குகள் நாசப்படுத்தி வருகின்றன. வீட்டு கூரைகளையும் நாசமாக்கி வருகின்றன. இதுபற்றி மக்கள் தொடர்ந்து முறையிட்டதையடுத்து, வனவிலங்கு அதிகாரசபை அதிரடித்திட்டமொன்றை அறிவித்துள்ளது. ஒரு குரங்கை பிடித்து கொடுத்தால் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனையடுத்து மக்கள் குரங்குகளை பிடிப்பதற்காக பொறி ஒன்றை தயாரித்துக் கொண்டு திரிகின்றார்கள். இதில் வரணியை சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த சனிக்கிழமை ஒரேதடவையில் 13 குரங்குகளை பொறிவைத்து பிடித்து 13 ஆயிரம் ரூபாக்களை அள்ளிச் சென்றுள்ளார்.

Leave a Reply

 
© 2015 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com